சூர்யா ப‌திவுக‌ள்

Archive for the ‘அரசியல்’ Category

கன்னட அமைப்புகளை கண்டித்து தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம் – ரஜினி, கமல் பங்கேற்ப்பு

Posted by சூர்யா மேல் ஏப்ரல் 6, 2008

கர்நாடக அரசைக் கண்டித்தும், கன்னட அமைப்புகளின் வன்முறைகளை எதிர்த்தும் தமிழ் திரையுலகினர் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம்  மேற்கொண்டனர். இதில் ரஜினி, கமல் உட்பட அனைத்து திரையுலக கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்காக சென்னை சேப்பாக்கம் அரசினர் மாளிகை எதிரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த போராட்டத்தின் காரணமாக உலகமெங்கும் நடைபெறவிருந்த படப்பிடிப்புகளும், தமிழக திரை அரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகாவில் அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக ஆட்டம் போடுகிறார்கள் என்றும் இதை முதலமைச்சர் உடனடியாக தடுத்து இப்பொழுதே நகத்தால் கிள்ளி எறிய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசினார். தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் ஒன்று கூடி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது நமக்குள் இருக்கும் ஒற்றுமையைக் காட்டியது.

Posted in அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

கர்நாடகாவில் வன்முறை

Posted by சூர்யா மேல் ஏப்ரல் 1, 2008

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீறும் என்ற அறிவிப்புக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரில் நடந்த கலவரத்தில் தமிழ் படம் திரையிடப்படும் தியேட்டர்கள், தமிழ்ச் சங்கம், தமிழக பேருந்துகள் மற்றும் லாரிகள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கர்நாடக போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேடிக்கையே.

தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய தாக்குதல்களையும் போராட்டங்களையும் மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு உடனடியாக கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்.

Posted in அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

திடீர் ராஜினாமா – விஜய டி. ராஜேந்தர்

Posted by சூர்யா மேல் மார்ச் 29, 2008

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜய டி. ராஜேந்தர் தான் வகித்து வந்த தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை திடீரென்று கடந்த மார்ச் 25, செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். இவர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் குரல் கொடுக்க தனது தற்போதைய பதவி தடையாக இருப்பதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.

Posted in அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »