சூர்யா ப‌திவுக‌ள்

Posts Tagged ‘ஏர் இந்தியா’

ஸ்பாட் ஃபேர் ச‌லுகை டிக்கெட் – ஏர் இந்தியா

Posted by சூர்யா மேல் ஜூன் 14, 2008

க‌ட‌ந்த‌ மே மாத‌ம் 27 முத‌ல் ஸ்பாட் ஃபேர் ச‌லுகை டிக்கெட்டை  ஏர் இந்தியா நிருவ‌ன‌ம் அறிவித்துள்ள‌து. உள் நாட்டு விமான‌ங்க‌ள் புற‌ப்ப‌டுவ‌த‌ற்கு 6 ம‌ணி நேர‌த்திற்குள் டிக்கெட் எடுப்ப‌வ‌ர்க‌ளுக்கு (டிக்கெட் இருந்தால் ம‌ட்டுமே..) ஸ்பாட் ஃபேர் ச‌லுகை பொருந்தும். இந்த‌ டிக்கெட்டை ஏர் இந்தியா சிட்டி புக்கிங் ஆபிஸ், விமான‌ நிலைய‌ ரிச‌ர்வேஷ‌ன் க‌வுண்ட‌ர் அல்ல‌து அனும‌தி பெற்ற‌ அனைத்து  ட்ரேவ‌ல் ஏஜ‌ண்ட் மூல‌மாக‌வும் பெற முடியும் என‌ அறிவித்துள்ள‌து. ஆன் லைனிலும் இச்ச‌லுகைக்கான‌ நெட்  டிக்கெட்டை ஏர் இந்தியா www.airindia.in  இணைய‌ முக‌வ‌ரியைப் ப‌ய‌ன்ப‌டுத்தி எடுக்க‌லாம். விமான‌ க‌ட்ட‌ண‌ம் உய‌ர்ந்துள்ள‌ இவ்வேளையில் இந்த‌ ச‌லுகை ம‌க்க‌ளுக்கு ச‌ற்று ஆறுத‌ல் த‌ரும் செய்தியே. இந்த‌ ச‌லுகை திடீரென‌ அவ‌ச‌ர‌ ப‌ய‌ணம் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌க் குறைந்த‌ விலையில் டிக்கெட் கிடைக்க‌ வாய்ப்புள்ள‌து என்ப‌தில் எவ்வித‌ ச‌ந்தேக‌மும் இல்லை.
 
இச்ச‌லுகை ப‌ற்றி மேலும் விப‌ர‌ம் அறிய‌ கீழ்க‌ண்ட‌ இணைய‌ த‌ள‌த்தைப் பார்க்க‌வும்:

http://www.indianairlines.in/scripts/spotfares.aspx#

Posted in செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »