சூர்யா ப‌திவுக‌ள்

கெத்தை

Posted by சூர்யா மேல் செப்ரெம்பர் 22, 2011

கெத்தை ப‌ல‌ருக்கு ப‌ரிச்ச‌ய‌மில்லாத‌ ஊர். அது த‌மிழ்நாடு நீர் மின் உற்ப‌த்தி நிலைய‌ங்க‌ளில் மிக‌வும் முக்கிய‌மான‌ ஒன்று. நான் அப்பொழுது ப‌த்தாம் வ‌குப்பு ப‌டித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா த‌மிழ்நாடு மின்சார‌ வாரிய‌த்தில் ப‌ணியாற்றிக் கொண்டிருந்தார். என‌க்கு அரை ப‌ரீட்சை ஆர‌ம்பிக்கும் ச‌ம‌ய‌ம். ந‌ல்ல‌ ம‌ழை கால‌ம் வேறு. அப்பொழுதெல்லாம் ப‌ள்ளிக்கு ந‌ட‌ந்துதான் செல்ல‌ வேண்டும். சுமார் 5 கி.மீ தின‌மும் நாங்க‌ள் (3 தோழிக‌ள்) அர‌சு குடியிருப்பிலிருந்து ந‌ட‌ந்துதான் செல்வோம், அதுவும் ஒரு இனிமையான கால‌ம்.

அரை ப‌ரீட்சையில் முத‌ல் ப‌ரீட்சை த‌மிழ். நானும் என‌து தோழியும் எங்க‌ள் வீட்டில் ப‌டித்துக் கொண்டிருந்த‌போது ம‌ணி சுமார் இர‌வு 7.30. ந‌ல்ல‌ ம‌ழை சோவென‌ பெய்து கொண்டிருந்த‌து. திடீரென்று ப‌ல‌த்த‌ இடி இடித்த‌து.. இதுவ‌ரை அப்ப‌டி ஒரு இடியை நாங்க‌ள் கேட்ட‌தே இல்லை. இடியோடு ப‌ல‌த்த‌ மின்ன‌லும் கூட‌.. அம்மா இடியை கேட்டு இந்த‌ இடி க‌ண்டிப்ப்பாக‌ எங்கோ விழுந்திருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த‌ இர‌வு முழுவ‌தும் ம‌ழை விடாது பெய்து கொண்டிருந்த‌து. ம‌றுநாள் காலை வழ‌க்க‌ம் போல் நானும் த‌ம்பியும் ப‌ள்ளிக்கு கிள‌ம்பிக் கொண்டிருந்தோம். அப்பா சேவிங் செய்து கொண்டிருந்தார். திடீரென்று வெளியே நிறைய‌ பேர் க‌த்தும் ச‌த்த‌ம். என்ன‌வென்று பார்க்க‌ வெளியே சென்றோம். கேம்பில் உள்ள‌வ‌ர்க‌ள் அங்கும் இங்கும் ந‌ட‌ந்து கொண்டிருந்தார்க‌ள். கீழ் லைனில் வ‌சிக்கும் என‌து த‌ம்பியின் ந‌ண்ப‌ன் அழுதுகொண்டே ஓடிக்கொண்டிருந்தான். அவ‌னிட‌ம் என்ன‌வென்று விசாரித்த‌போது அவ‌ன் ஓ வென்று அழுதான். ……

Posted in அனுபவக் கதைகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

த‌மிழ‌க‌ இசைப்புய‌ல் ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு 2 ஆஸ்க‌ர் விருது

Posted by சூர்யா மேல் பிப்ரவரி 23, 2009

த‌மிழ‌க‌த்தின் இசைப்புய‌ல் ஏ.ஆர்.ர‌ஹ்மான் “ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” ப‌ட‌த்தில் சிற‌ப்பாக‌ இசை அமைத்த‌த‌ற்காக‌வும்,  “ஜெய் ஹோ” என்ற‌ அந்த‌ப் ப‌ட‌த்தின் பாட‌லுக்காக‌வும் இர‌ண்டு ஆஸ்க‌ர் விருதுக‌ளைப் பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளார்.

“ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” ப‌ட‌த்துக்காக‌ திரைக்க‌தை, இசைய‌மைப்பாள‌ர், ஒளிப்ப‌திவு, ச‌வுண்ட் மிக்சிங் உட்ப‌ட‌ 8 ஆஸ்க‌ர் விருதுக‌ள் கிடைத்துள்ள‌து. உல‌கின் மிக‌ உய‌ரிய‌ விருதான‌ ஆஸ்க‌ர் விருதை 2 பிரிவுக‌ளில் பெறும் முத‌ல் இந்திய‌ர் என்ற‌ பெருமை பெறும் ர‌ஹ்மானுக்கு த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி ம‌ற்றும் த‌மிழ் திரையுல‌க‌ம் சார்பில் கே.பால‌ச‌ந்த‌ர், க‌ம‌ல்ஹாச‌ன், எஸ்.வி.சேக‌ர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட‌ அனைவ‌ரும் வாழ்த்து தெரிவித்த‌ன‌ர். த‌மிழ் திரையுல‌க‌ம் சார்பில் ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு பிர‌மாண்ட‌மான‌ பாராட்டு விழாவும் மிக‌ விரைவில் ந‌டைபெற ஏற்பாடு செய்ய‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ விருதைப் பெறுவ‌த‌ற்காக‌ மேடையேறிய‌ ர‌ஹ்மான் இறுதியில் “எல்லாப் புக‌ழும் இறைவ‌னுக்கே” என‌த் த‌மிழில் பேசி த‌ன‌து ந‌ன்றியை ம‌கிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மேலும் இப்ப‌ட‌த்திற்கு ச‌வுண்ட் மிக்சிங்‍‍கிற்கான‌ விருது இந்தியாவின் கேர‌ள‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌ ரெசுல் பூக்குட்டிக்கு  கிடைத்த‌தும், இத‌னால் மூன்று ஆஸ்க‌ர் விருதுக‌ளைப் பெற்றுத் த‌ந்து இவ்விருவ‌ரும் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ள‌ன‌ர்.

Posted in சினிமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

த‌டா அருவியும் ப‌ய‌ண‌ அனுப‌வ‌மும்

Posted by சூர்யா மேல் ஜனவரி 24, 2009

நான் சென்னையில் ப‌ணிபுரிந்து கொண்டிருந்த‌ நேர‌ம் அது. என்னுட‌ன் இருந்த‌ என‌து ந‌ண்ப‌ர் அப்பொழுது அமெரிக்கா சென்று விட்டு இர‌ண்டு வ‌ருட‌ம் க‌ழித்து வ‌ந்திருந்தார். அங்கே அவ‌ர் பார்த்த‌ ம‌லைக‌ளைப் பற்றியும் அங்கிருந்த‌ அருவிக‌ளைப் பற்றியும் விவ‌ரித்த‌வ‌ர், த‌ன‌க்கு அருவிக‌ள் இருக்கும் இட‌ங்க‌ள் என்றால் மிக‌வும் பிடிக்கும் என்றும் த‌மிழ் நாட்டில் உள்ள‌ அருவிக‌ளில் குற்றால‌த்தைத் த‌விர‌ வேறு எங்கும் சென்ற‌தில்லை, இம்முறையாவ‌து நேர‌ம் கிடைக்கும் பொழுதெல்லாம் அருகில் இருக்கும் அருவிக‌ளுக்குச் சென்று வ‌ர‌வேண்டும் என்றார்.

நான் அவ‌ரிட‌ம் த‌மிழ்நாடு ம‌ற்றும் கேர‌ளாவில் உள்ள அனைத்து இட‌ங்க‌ளுக்கும் சென்று வ‌ந்த‌ அனுப‌த்தையும், பார்த்த‌ அருவிக‌ளைப் ப‌ற்றியும் கூறிய‌வுட‌ன் அவ‌ர் என்னை நேர‌ம் கிடைக்கும்போது ஒவ்வொரு இட‌மாக‌ சென்று வ‌ர‌லாம், எங்கே இங்கே சென்னைக்கு அருகில் எந்த ஒரு அருவியும் இல்லை என்றதும், நான் இங்கு சென்னைக்கு அருகில் இர‌ண்டு அருவிக‌ள் உள்ள‌து என்றும் அத‌ன் பெய‌ர் கொனே ம‌ற்றும் த‌டா என்றதும் அவ‌ர் உட‌னே இந்த‌ வார‌ம் எதாவ‌து ஒரு அருவிக்கு சென்று வ‌ர‌லாம் என‌ ஆர‌ம்பித்துவிட்டார். உட‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ரை அழைத்துக்கொண்டு அந்த‌ வார‌ இருதியிலேயே த‌டா அருவிக்கு செல்ல‌த் தயாரானோம். எங்க‌ளுக்கு இய‌ல்பாக‌வே வார‌ இறுதியிலும் வேலை இருந்து கொண்டுதான் இருக்கும், அந்த‌ வார‌ வேலையை எல்லாம் ஒத்திப்போட்டு விட்டு அனைத்தையும் ம‌ற‌ந்து சென்னையிலிருந்து ச‌னிக்கிழ‌மை காலை ஏழு ம‌ணிக்கெல்லாம் கிள‌ம்பிவிட்டோம்.

சென்னையிலிருந்து கால‌ஹ‌ஸ்தி சாலையில் சுமார் 95 கி.மீட்ட‌ர் தொலைவில் தான் த‌டா உள்ள‌து. த‌டா அருவிக்கு செல்ல‌ வேண்டுமானால் வ‌ர‌த‌ய்யா பாளைய‌ம் சென்று அங்கிருந்துதான் ஒரு குருகிய‌ ரோட்டில் உப்ப‌ல‌ம‌டுகு செக்போஸ்ட் வ‌ழியாக‌ செல்ல‌ வேண்டியிருக்கிற‌து. உப்பல‌ம‌டுகு செக்போஸ்ட்டில் இருந்து சுமார் 10 கி.மீட்ட‌ர் தூர‌ம் காட்டுக்குள் சென்று அதுவும் க‌ர‌டு முர‌டான‌ பாதையில் ஒரு இட‌த்திற்கு மேல் காரில் செல்ல‌ முடிவ‌தில்லை. நாங்க‌ள் முய‌ன்ற வ‌ரை உள்ளே சென்று ஒரு வீட்டின் அருகில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்கார‌ரிட‌ம் வ‌ழிகேட்டு அவ‌ரிட‌ம் நாங்க‌ள் வ‌ரும் வ‌ரை வ‌ண்டியை இங்கு விட்டுச் செல்வ‌தையும் கூறிப் புற‌ப்ப‌ட்டோம்.

அவ‌ர் சொன்ன‌ பாதை வ‌ழியாக‌ நாங்க‌ள் ந‌டையைக் க‌ட்ட‌ ஆர‌ம்பித்தோம். நாங்க‌ள் இங்கு வ‌ருவ‌த‌ற்கு முன்பே ந‌ன்கு இந்த‌ இட‌த்தைப் பற்றி தெரிந்திருந்த‌தால், ந‌ட‌க்கும் தூர‌த்தைப் ப‌ற்றியும் த‌னிமையான ஆள் ந‌ட‌மாட்ட‌ம் இல்லாத‌ காட்டுப் பாதை ம‌ற்றும் இங்கு ந‌ட‌க்கும் வ‌ண்டி ச‌ம்ப‌த்த‌ப்பட்ட‌ திருட்டுக‌ள் ப‌ற்றியும் அறிந்து வைத்திருந்த‌து மிக‌வும் உத‌வியாக‌ இருந்த‌து. இர‌ண்டு கி.மீட்ட‌ர் ந‌ட‌ந்த‌தும் ம‌லைய‌டிவார‌ம் தெரிந்த‌து, அங்கு ஒரு சான்ட்ரோ கார் நிற்ப‌தைப் பார்த்த‌தும் யாரோ ந‌ம‌க்கு முன்ன‌ர் வ‌ந்திருக்கிறார்க‌ள் என்று சொல்லி காரை நெருங்கினோம்.

அங்கு சான்ட்ரோ காரின் க‌த‌வுக் கண்ணாடி உடைந்திருப்ப‌தைப் பார்த்து சுற்றும் முற்றும் பார்த்தோம். அந்த‌ இட‌த்தில் யாருமே இல்லை, ந‌ல்ல‌ வேலை ந‌ம் வ‌ண்டியை ஒருவ‌ர் வீட்டில் நிறுத்தி வ‌ந்தோம் என‌ நினைத்து ச‌ற்று ஆறுத‌ல் அடைந்து மீண்டும் ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தோம். அந்த‌ இட‌த்தில் இருந்து ந‌ல்ல‌ அட‌ர்த்தியான‌ ம‌ர‌ங்க‌ள் அட‌ங்கிய‌ காடு ஆர‌ம்பிக்கிற‌து, சிலு சிலுவென‌ காற்று அடிக்க தொட‌ர்ந்து ம‌லையில் எற‌ ஆர‌ம்பித்தோம்.

சிறிது தூர‌த்தில் அருவியில் இருந்து வ‌ரும் த‌ண்ணீர் சிறு ஆறு போல‌ ஓடிக்கொண்டிருந்த‌து. அதை ஒட்டியே பாறைகளுக்கு ந‌டுவே இருக்கும் இடுக்குக‌ளில் ஏற‌ ஆர‌ம்பித்தோம், சிறிது தூர‌ம் சென்ற‌தும் குடும்ப‌த்துட‌ன் நான்கு பேர் குளித்துக் கொண்டு இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளைப் பார்த்த‌தும் தான் எங்க‌ளுக்கு நாங்க‌ள் வ‌ரும் வ‌ழியில் நின்றிருந்த‌ சான்ட்ரோ கார் ஞாப‌க‌ம் வ‌ந்து அவ‌ர்க‌ளிட‌ம் நாங்க‌ள் பார்த்த‌தை விள‌க்கிய‌தும் அவ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் ப‌த‌ட்ட‌த்துக்குள்ளானதைப் பார்த‌த‌தும் நாங்க‌ள் சார் இங்கு இது சாதார‌ண‌மாக‌ இந்த‌ இட‌த்தில் ந‌ட‌க்கும் விஷ‌ய‌ம் தான் நீங்க‌ள் க‌வ‌லைப்ப‌டாதீர்க‌ள் என்று சொல்லிவிட்டு மேலே உள்ள‌ அருவியை நோக்கி நடையை க‌ட்டினோம். த‌ங்க‌ள் குடும்ப‌த்துட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ள் குளிக்கும் இட‌த்தை தாண்டி செல்ல‌ முடியாது (மாட்டார்க‌ள்) என்ப‌தை மேலே ஏறும்போது நாங்க‌ள் தெரிந்துகொண்டோம்.

க‌ர‌டு முர‌டான‌ வ‌ழுக்கும் ப‌றைகளுக்கு இடையில் ப‌ல‌ முறை ச‌றுக்கி விழுந்து மேலே உள்ள‌ அருவிக்கு சென்றே தீர‌வேண்டும் என்ற‌ ஒரு வைராக்கிய‌த்துட‌ன் ஏற, இடையில் சிறிது தூர‌த்தில் சின்ன‌ அருவி ஒன்றை பார்க்க‌ நேர்ந்த‌து. அது போல் உள்ள‌ அருவியை நாம் திரைப்ப‌ட‌த்தில் தான் பார்த்திருப்போம், ஆம் அது ‘மின்சார‌ க‌ன‌வு’ ப‌ட‌த்தில் ‘த‌ங்க‌த் தாம‌ரை ம‌க‌ளே’ என்ற‌ பாட‌லில் வ‌ரும் அருவி மாதிரியே இருந்த‌து. அது போல் அருவியைப் பார்த்தால் யாருக்குமே அந்த‌ அருவியில் போய் ச‌ற்று நேர‌ம் குளிக்க‌த் தோன்றுவ‌து இய‌ல்பு தான். நாங்க‌ள் சிறிது நேர‌ம் குளித்து விட்டு கிள‌ம்பும்போது எங்க‌ளுட‌ன் வ‌ந்த‌ ந‌ண்ப‌ருக்கு அந்த‌ அருவியை விட்டு வ‌ர‌ ம‌ன‌மே வ‌ர‌வில்லை.

ஏனென்றால் மேலும் நாங்க‌ள் மெயின் அருவியை அடைய சிறிது தூர‌ம் வ‌ழுவ‌ழுப்பான‌ பாறைக‌ளில் போராட்ட‌மாக‌ ஏற‌ வேண்டி வ‌ருமே என்ப‌து தான் அவ‌ர‌து த‌ய‌க்க‌த்திற்கு கார‌ண‌ம். அவ‌ரையும் இழுத்துக்கொண்டு ஒரு வ‌ழியாக‌ ஒரு ம‌ணி நேர‌த்தில் மெயின் அருவி கொட்டும் இட‌த்திற்கு சென்ற‌டைந்தோம். அந்த‌ இட‌த்தில் இருந்து அந்த‌ த‌டா அருவியைப் பார்த்த‌பொழுது ஆஹா… என்ன‌ இட‌ம்.. ப‌ல‌த்த‌ ச‌த்த‌த்துட‌னும் சிலு சிலுவென‌ உட‌ம்பில் ப‌ட்ட‌ சார‌லுட‌னும் இருந்த‌ அந்த‌ அருவி என்னை கேர‌ளாவில் சால‌க்குடி அருகில் உள்ள‌ அதிர‌ப்ப‌ள்ளி (புன்ன‌கை ம‌ன்ன‌ன்) அருவியை ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌து.

நாங்க‌ள் எவ்வ‌ள‌வோ முய‌ன்றும் அந்த‌ அருவியில் விழும் த‌ண்ணீரில் கூட‌ குளிக்க‌ முடிய‌வில்லை, அந்த‌ அள‌வு த‌ண்ணீர் அதி வேக‌மாக‌ வ‌ந்த‌தும், அருவியின் அருகில் உள்ள‌ பாறைக‌ள் வ‌ழுக்கும்ப‌டியாக‌ இருந்த‌தாலும் எங்க‌ளினால் அருவியைப் பார்த்து ர‌சிக்க‌ ம‌ட்டுமே முடிந்த‌து. ப‌ல‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை நாங்க‌ள் எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே இறங்கலாம் என்ற‌தும் தான் ஆஹா… வந்த‌ மாதிரியே ப‌ல‌ பாறைக‌ளில் ஏறி இற‌ங்க‌ வேண்டுமே என்று நினைத்துக் கொண்டு வேறு வ‌ழியில்லாம‌ல் ஒரு ம‌ன‌தாக‌ இற‌ங்கி கீழே நாங்க‌ள் முன்ன‌மே பார்த்த‌ அருவியில் குளித்துவிட்டு மாலை சென்னை திரும்பினோம்.

காட்டுக்குள் இவ்வ‌ள‌வு தூர‌ம் ந‌ட‌ந்து சென்ற‌து எங்க‌ளுக்கு அதுவே முத‌ல் முறை ம‌ற்றும் எங்க‌ளில் அது ஒரு ம‌ற‌க்க‌ முடியாத‌ ஒரு ப‌ய‌ண‌மாக‌ அமைந்த‌து.

Posted in அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 2 Comments »

ஆஸ்க‌ர் விருதுக்காக‌ ஏ.ஆர்.ர‌ஹ்மான் பெய‌ர் 3 பிரிவுக‌ளில் ப‌ரிந்துரை

Posted by சூர்யா மேல் ஜனவரி 24, 2009

த‌மிழ‌க‌த்தின் இசைப்புய‌ல் ஏ.ஆர்.ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளின் பெய‌ர் இந்த‌ ஆண்டு ‘ஆஸ்க‌ர் விருது’க்கு 3 பிரிவுக‌ளில் ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. ஏ.ஆர்.ர‌ஹ்மான் இசைய‌மைத்த‌ “ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” என்ற‌ திரைப்ப‌ட‌ம் சிற‌ந்த‌ இசைய‌மைப்பாள‌ர், சிற‌ந்த‌ இய‌க்குன‌ர் உள்ப‌ட‌ 10 ஆஸ்க‌ர் விருதுக‌ளுக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஏ.ஆர்.ர‌ஹ்மானின் பெய‌ர் 3 பிரிவுக‌ளில் அதாவ‌து இந்த‌ப் ப‌ட‌த்திற்கு இசை அமைத்த‌த‌ற்காக‌வும் இர‌ண்டு பாட‌ல்க‌ளுக்காக‌வும் ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்தியாவை சேர்ந்த‌ ஒருவ‌ர் 3 விருதுக‌ளுக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌டுவ‌து இதுவே முத‌ல் முறை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

ஏ.ஆர்.ர‌ஹ்மானின் திரையுல‌க‌ வாழ்வின் ல‌ட்சிய‌மும் ந‌ம‌து எதிர்பார்ப்பும் வ‌ரும் பிப்ர‌வ‌ரி மாத‌ம் 22‍ம் தேதி ஆஸ்க‌ர் விருது அறிவிப்பில் தெரிந்துவிடும். இந்தியாவில் இதுவ‌ரை யாருக்கும் கிடைக்காத‌ பெருமை இந்த‌ ஆஸ்க‌ர் விருதைப் பெறுவ‌தின் மூல‌ம் ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு கிடைக்கும் என‌ ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருப்போம்.

Posted in சினிமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

சூப்ப‌ர் சிங்க‌ர் 2008 நிக‌ழ்ச்சியில் ம‌னோ ம‌ற்றும் சித்ரா

Posted by சூர்யா மேல் ஜனவரி 24, 2009

விஜ‌ய் டி.வியில் தொட‌ர்ந்து பார்த்து ர‌சிப்ப‌துபோல் இருக்கும் நிக‌ழ்ச்சியில் ஒன்று சூப்ப‌ர் சிங்க‌ர் 2008 நிக‌ழ்ச்சி என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌தே. இந்த‌ நிக‌ழ்ச்சியில் மனோ ம‌ற்றும் சித்ரா அவ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்ட‌ வார‌ம் மிக‌வும் சுவார‌ஸ்யமாக‌வும் ர‌சிக்கும்ப‌டியாக‌வும் இருந்த‌து. அதில் குறிப்பாக‌ மனோ.. அச‌த்தி விட்டார் அவ‌ர் செய்த‌ ஆக்டிங், மிமிக்ரி ம‌ற்றும் பாடும்பொழுது அவ‌ர் செய்த‌ அனாச‌ய‌ங்க‌ள் மேலும் நிக‌ழ்ச்சியை மெருகூட்டிய‌து.

ம‌னோ மேடையில் வ‌ந்த‌துமே அவ‌ர் என்.டி.ராம‌ராவ் போல் செய்த‌தும் ‘ஆயிர‌த்தில் நான் ஒருவன்’ என‌த் தொட‌ங்கும் ‘இருவ‌ர்’ ப‌ட‌ப் பாட‌லைப் பாடும்பொழுது அவ‌ர் செய்த‌ ஆக்டிங்கும், அட‌ ம‌னோ தானா என‌ விய‌க்கும்ப‌டியாக‌ இருந்த‌து. சின்ம‌யி ‘நேத்து ஒருத்த‌ர‌ ஒருத்த‌ரு பார்த்தோம்’ பாட‌லை சோக‌மாக‌ப் பாட‌ச் சொல்லிக் கேட்க‌ ம‌னோ அந்த‌ப் பாட‌லை சோக‌மாக‌ப் பாடி க‌ல‌க்கிய‌து ர‌சிக்கும்ப‌டியாக‌ இருந்த‌து. நீண்ட‌ நாட்க‌ள் க‌ழித்து ம‌னோ ம‌ற்றும் ‘சின்ன‌ குயில்’ சித்ரா அவ‌ர்க‌ள் மேடை நிக‌ழ்ச்சியில் பாடுவ‌தை பார்க்கும் வாய்ப்பு அனைவ‌ருக்கும் இந்த‌ சூப்ப‌ர் சிங்க‌ர் நிக‌ழ்ச்சி மூல‌ம் கிடைத்த‌தில் விஜ‌ய் டி.விக்கு தான் ந‌ன்றி சொல்ல‌வேண்டும்.

Posted in அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »

நாளைய கிழக்கு

Posted by சூர்யா மேல் ஜனவரி 20, 2009

இன்றைய கிழக்கின்
இளைய பாரதத்தில்
எத்தனை அவலங்கள்
எத்தனை கொடுமைகள்

பஞ்சம் ஒரு பக்கம்
பசி ஒரு பக்கம்
தஞ்சம் புகுந்திட
தரணியில் இடமில்லை
     
சாராய சாம்ராஜ்யம்
சண்டாளர் கேளிக்கை
பாராளும் மன்னர்கள்
பதவிக்கு குடுமிப்பிடி

சடுகுடு விளையாடிய
சகோதர பூமியில்
வெடிகுண்டு கலாச்சாரம்
வீதியெங்கும் பிணக்குவியல்

கலாச்சாரம் பண்பாடு
போனதெங்கே எனத்தேடு
சாதி மதக் கலவரங்கள்
படுத்துதிங்கே பெரும்பாடு

எனவே,

சாதி மத பேதமில்லா
ந‌மதருமை பண்பாட்டோடு
இளைஞர் சமுதாயம் எழுச்சி பொங்க
புதிய பாரதம் படைத்திட

சத்தியம் ந‌மது புத்தகமாகட்டும்
சமத்துவம் ந‌மது தத்துவமாகட்டும்
நாளைய கிழக்காவது
ந‌லமாய் விடியட்டும்.

– மீனா மாத‌வ‌ன், ஈரோடு

Posted in க‌விதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 2 Comments »

இசைய‌மைப்பாள‌ர் ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு கோல்ட‌ன் குளோப் விருது

Posted by சூர்யா மேல் ஜனவரி 13, 2009

உல‌க‌ப்புக‌ழ் பெற்ற இசை அமைப்பாள‌ரும் ந‌ம் த‌மிழ‌க‌த்தின் goldenglobeaward_arr” இசைப்புய‌ல்” என‌ வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் ஏ.ஆர்.ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளுக்கு ஹாலிவுட்டின் உய‌ரிய‌ விருதாக‌க் க‌ருத‌ப்ப‌டும் “கோல்ட‌ன் குளோப்” விருது “ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” என்ற‌ ஆங்கில‌த் திரைப்ப‌ட‌த்திற்கு இசைய‌மைத்த‌த‌ற்காக‌க் கிடைத்துள்ள‌து.

இந்த‌ விருதைப் பெற்ற‌த‌ன் மூல‌ம் கோல்ட‌ன் குளோப் விருதைப் பெறும் முத‌ல் இந்திய‌ர் என்ற‌ பெருமையை ஏ.ஆர்.ர‌ஹ்மான் பெறுகிறார். மேலும் இந்த‌ விருது ஆஸ்கார் விருதுக்கான‌ நுழைவாயிலாக‌வே க‌ருத‌ப்ப‌டுவ‌தால் ஆஸ்கார் விருதிற்கான‌ க‌லைஞர்க‌ள் பட்டியலில் ந‌ம‌து ஏ.ஆர்.ரஹ்மானின் பெய‌ரும் நேர‌டியாக‌ இட‌ம்பெரும் என்ற ந‌ம்பிக்கை இப்பொழுது பிர‌காச‌மாக‌ உள்ளது குறிப்பிட‌த்த‌க்க‌து.

த‌மிழ், ஹிந்தி திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு ப‌ல்வேறு தேசிய‌ ம‌ற்றும் மாநில‌ விருதுக‌ளைப் பெற்றிருந்தாலும் இப்பொழுது உல‌க‌ புக‌ழ்பெற்ற கோல்ட‌ன் குளோப் விருதைப் பெற்று உல‌க‌ அள‌வில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் ஏ.ஆர்.ர‌ஹ்மானின் திற‌மையை எவ்வ‌ள‌வு பாராட்டினாலும் அது த‌கும்.

Posted in சினிமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 9 Comments »

த‌ட‌ம் மாறிய‌ ப‌ய‌ண‌ம்

Posted by சூர்யா மேல் ஜனவரி 17, 2009

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து ம‌துரை சென்ற‌ பொழுது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இது. நாங்க‌ள் ஈரோட்டிலிருந்து ம‌துரை செல்வ‌த‌ற்காக‌ மும்பை-நாக‌ர்கோவில் எக்ஸ்பிர‌ஸில் முன்ப‌திவு செய்திருந்தோம். மாலை 5.10 க்கு ர‌யில் கிள‌ம்பும் என்ப‌தால் நாங்க‌ள் 4.30 ம‌ணிக்கே ர‌யில் நிலைய‌ம் சென்றுவிட்டோம். ர‌யில் நிலைய‌ விசார‌ணை அலுவ‌ல‌க‌த்தில் மும்பை ர‌யில் எந்த‌ பிளாட்பார‌ம் என்று கேட்ட‌பொழுது முத‌ல் பிளாட்பார்மில் நிற்கிற‌து சீக்கிர‌ம் செல்லுங்க‌ள் என்றார்க‌ள்.

நாங்க‌ளும் வேக‌மாக‌ ர‌யிலை நோக்கி சென்றோம். என் க‌ண‌வ‌ர் அவ‌ச‌ர‌ப்ப‌டுத்திய‌தால் வேக‌மாக‌ப் ப‌டியேறி பிளாட்பார்மில் ஓடிய‌பொழுது வ‌ழுக்கி அதே இட‌த்தில் விழுந்துவிட்டேன். விழுந்த‌தில் காலிலும் அடி, ஒரு செருப்பும் அறுந்துவிட்ட‌து, என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் செருப்பை ஒரு கையில் பிடித்த‌ப‌டி நிற்கிறேன், என் க‌ண‌வ‌ரோ ப‌ர‌வாயில்லை ர‌யிலில் ஏறி பார்த்துக்கொள்ள‌லாம் ஓடி வா என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினார். ஒரு வ‌ழியாக‌ எங்க‌ள் க‌ம்பார்ட்மெண்டில் ஏறி எங்க‌ள் சீட் நெம்ப‌ரை தேடிய‌பொழுது அங்கே ஏற்க‌ன‌வே இருவ‌ர் அம‌ர்ந்திருந்த‌ன‌ர். ஏற்க‌ன‌வே ஓடி வ‌ந்த‌ க‌ளைப்புட‌னும் செருப்பு அறுந்த‌ கோப‌த்துட‌ன் இருந்த‌ நான் அவ‌ர்க‌ளிட‌ம் இது எங்க‌ள் சீட் என்று க‌டுப்பாக‌க் கூறிய‌வுட‌ன் அவ‌ர்க‌ள் பேசாம‌ல் எழுந்து சென்று எதிற்புற‌ம் அம‌ர்ந்த‌ன‌ர். வ‌ண்டி பிளாட்பார‌த்தில் இருந்து புற‌ப்ப‌டத் த‌யாரான‌தும் உள்ளே காபி.. காபி… காபி..  சார் காபி… சார் காபி..காபி.. காபி… சார் காபி.., என்று கூவி காபி விற்றுக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் வ‌ண்டி கிள‌ம்பிய‌தும் ஓடும் வ‌ண்டியில் இருந்து ச‌ற்றும் அல‌ட்டாம‌ல் இற‌ங்கி சென்ற‌தைப் பார்த்த‌தும், எப்ப‌டி இவ‌ர்க‌ளால் ம‌ட்டும் இப்ப‌டி அனாச‌ய‌மாக‌ ஓடும் வ‌ண்டியில் இருந்து இற‌ங்க முடிகிற‌து என்று நினைத்துக் கொண்டேன். வ‌ண்டியும் வேக‌ம் பிடித்த‌து.

நான் என் க‌ணவ‌ரிட‌ம் ஏன் இன்று சீக்கிர‌ம் ர‌யில் கிள‌ம்பிவிட்ட‌து 4.45 க்கே கிள‌ம்பிய‌தால் 9.45 க்கு ம‌துரை சென்று விட‌லாம் என்று ம‌கிழ்ச்சியுட‌ன் சொல்லிக் கொண்டிருந்த‌ சிறிது நேர‌த்தில் டி.டி.ஆர் வ‌ந்து எங்க‌ள‌து ப‌ய‌ண‌ச்சீட்டை வாங்கி ச‌ரி பார்த்தார். சிறிது நேர‌ம் புர‌ட்டி புர‌ட்டி பார்த்த‌வ‌ர் ச‌ற்று குழ‌ப்ப‌த்துட‌ன் அம‌ர்ந்து நிதான‌மாக‌ எங்க‌ளைப் பார்க்க‌ ஆர‌ம்பித்தார்.

என‌க்கு சிறிது ப‌த‌ட்ட‌மாக‌ இருந்த‌து ஏனென்றால் அது இன்ட‌ர்நெட்டில் வீட்டிலேயே புக் செய்த‌ டிக்கெட் என்ப‌தால் ஒருவேளை என் க‌ண‌வ‌ர் த‌வ‌றான‌ தேதியில் புக் செய்து விட்டாரோ என்று எண்ணி அவ‌ரிட‌ம் கேட்டேன். அவ‌ரும் இல்லை நான் இர‌ண்டு முறை செக் ப‌ண்ணிவிட்டேன் புற‌ப்ப‌டும் தேதி, ர‌யில் எண் எல்லாமே ச‌ரியாக‌ இருந்த‌து என்றார். ஆனால் டி.டி.ஆர் முக‌த்தை குழ‌ப்ப‌த்துட‌ன் வைத்துக் கொண்டு அவ‌ருடைய‌ சார்ட் ம‌ற்றும் எங்க‌ள‌து ப‌ய‌ண‌ச்சீட்டையும் ப‌ல‌ முறை புர‌ட்டிக்கொண்டிருந்தார். ஒரு வ‌ழியாக‌ ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து எங்க‌ளிட‌ம் திரும்பி ரொம்ப‌வும் கூலாக‌ சார் நீங்க‌ள் வ‌ண்டி மாறி ஏறிவிட்டீர்க‌ள் என்று சொன்ன‌தும் ஆஹா.. இத‌ற்கா இவ்வ‌ள‌வு அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு ஏறினோம் என்று நினைத்து ஏமாற்ற‌ம‌டைந்த‌தை சுதாரித்துக்கொண்டு டி.டி.ஆரிட‌ம் இது மும்பை-நாக‌ர்கோவில் வ‌ண்டி தானே, நாங்க‌ள் பார்த்துதானே ஏறினோம் என்றேன். அவ‌ரும் சிரித்துக்கொண்டே இதுவும் மும்பை-நாக‌ர்கோவில் வ‌ண்டி தான் ஆனால் நீங்க‌ள் செல்ல‌ வேண்டிய‌து மும்பையிலிருந்து வ‌ந்து ம‌துரை வ‌ழியாக‌ நாக‌ர்கோவில் செல்லும் வ‌ண்டி, ஆனால் இதுவோ நாக‌ர்கோவிலில் இருந்து ஈரோடு வ‌ந்து மும்பை செல்லும் வ‌ண்டி என்றும், இந்த‌ வ‌ண்டி இர‌ண்டு ம‌ணி நேர‌ம் தாம‌த‌ம் என்ப‌தால் ஈரோட்டிற்கு உங்க‌ள் வ‌ண்டி வ‌ரும் அதே நேர‌த்திற்கு இதுவும் வ‌ந்து விட்ட‌து என்று விள‌க்கினார்.

நாங்க‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் முக‌த்தைப் பார்த்துகொண்டிருக்கையில் வ‌ண்டி ப‌ல‌த்த‌ வேக‌த்துட‌ன் காவேரி பால‌த்தைக் க‌ட‌ந்து கொண்டிருந்த‌து. இனி என்ன‌ செய்வ‌து என்று டி.டி.ஆரிட‌ம் கேட்ட‌தும், அவ‌ர் வேறு வ‌ழியில்லை நீங்க‌ள் சேல‌த்தில் இற‌ங்கி ப‌ஸ்ஸில் ம‌துரை செல்ல‌ வேண்டிய‌து தான் என்றார். ஒரு வேளை நீங்க‌ள் செல்ல‌ வேண்டிய‌ வ‌ண்டி தாம‌த‌மானால் நீங்க‌ள் சேல‌த்தில் அந்த‌ வ‌ண்டியில் ஏறிக்கொள்ள‌லாம் ஆனால் அது உங்க‌ள் அதிர்ஷ்ட‌த்தைப் பொறுத்த‌து என்று அவ‌ர் சொல்லி வாய் மூடிய‌துமே ச‌ங்க‌கிரியில் அந்த‌ வ‌ண்டி எங்க‌ள் எதிர்புற‌ம் க‌ட‌ந்து சென்றுகொண்டிருந்த‌து. இருந்த‌ ஒரு வ‌ழியும் போய்விட்ட‌து என்ற‌தால் நாங்க‌ள் அடுத்த‌ ர‌யில் ம‌துரைக்கு எப்பொழுது என்ற‌தும் சேல‌த்தில் இர‌வு 2 ம‌னிக்கு என்றார். இர‌வு 2 ம‌ணி வ‌ரை என்ன‌ செய்வ‌து என்று புரியாம‌ல் விழித்த‌பொழுது அவ‌ரே வேறு வ‌ழியில்லை சார், சேல‌த்தில் இற‌ங்கி ம‌துரைக்கு ப‌ஸ் பிடித்து செல்லுங்க‌ள் என்று கூறிவிட்டு அவ‌ர் சென்றுவிட்டார்.

எங்க‌ள‌து நிலைமையை நினைத்து வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தா இல்லை சிரிப்ப‌தா என்றே தெரிய‌வில்லை, ஏனென்றால் என்னால் ப‌ஸ்ஸில் அதிக‌ தொலைவு ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடியாது என்ப‌தால் தான் நாங்க‌ள் எப்பொழுதும் ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வ‌து வ‌ழ‌க்க‌ம். இப்பொழுது அதை விட‌ அதிக‌ தூர‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டுமே என்ன‌ செய்வ‌து என்று வ‌ருந்தினோம். வேறு வ‌ழியில்லை என்ப‌தால் நாங்க‌ளே ஒருவ‌ரையொருவ‌ர் ச‌மாதான‌ப்ப‌டுத்திக் கொண்டிருக்கையிலேயே வ‌ண்டி சேல‌ம் ர‌யில் நிலைய‌த்தை வந்து சேர்ந்த‌து. பின் நாங்க‌ள் சேல‌ம் ப‌ஸ் நிலைய‌ம் சென்று என‌க்கு செருப்பும் வாங்கிக்கொண்டு ம‌துரை போகும் ப‌ஸ்ஸில் ஏறி எப்பொழுது ம‌துரை சென்ற‌டையும் என்று க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் கேட்ட‌தும் அவ‌ர் ரொம்ப‌ கூலாக‌ ந‌ள்ளிர‌வு 1.30 ம‌ணிக்கு ம‌துரை சென்று விடும் என்றார். ஈரோட்டில் இருந்து 5 ம‌ணி நேர‌ ப‌ஸ் ப‌ய‌ணம் என்னால் முடியாது என்று ர‌யிலில் செல்லும் நாங்கள் அன்று வேறு வ‌ழியின்றி 8 ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌ம் செய்து ம‌துரை சென்ற‌டைந்தோம்.

அன்று முத‌ல் ர‌யில் நிலைய‌ம் சென்றால் என்ன‌ அவ‌ச‌ர‌ம் என்றாலும் ர‌யிலில் ஏறிய‌வுட‌ன் ப‌க்க‌த்து சீட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து நீங்க‌ள் எங்கே செல்கிறீர்க‌ள் என்று கேட்டு விடுவேன். இன்றும் ஈரோடு பிளாட்பார்மில் ஒரு காலில் செருப்புட‌னும் ஒரு கையில் அறுந்த‌ செருப்பையும் தூக்கிக்கொண்டு ஓடிய‌தை என‌து வாழ்க்கையில் ம‌ற‌க்க‌வே முடியாது.

– மீனா மாத‌வ‌ன், ஈரோடு

Posted in அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 1 Comment »

பில்லூர் – ஒரு த்ரில் ப‌ய‌ண‌ம்

Posted by சூர்யா மேல் ஜனவரி 4, 2009

க‌ல்லூரியில் ப‌டித்துக் கொண்டிருந்த‌ ச‌ம‌ய‌ம் ப‌ல‌ முறை பில்லூர் செல்ல‌ வாய்ப்பு கிடைத்த‌து. அங்கு எனது உற‌வின‌ர் பாபு* த‌மிழ்நாடு குடிநீர் வ‌டிகால் வாரிய‌த்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவ‌ர் அங்கிருந்த‌தால் அடிக்க‌டி அங்கு போகும் வாய்ப்பு எங்க‌ளுக்கு கிடைத்த‌து. அப்ப‌டி ஒரு முறை செல்லும்போது ஏற்ப‌ட்ட‌ அனுப‌வ‌த்தை உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

அப்பொழுதெல்லாம் க‌ல்லூரி விடுமுறை என்றால் என்னுட‌ன் என் ந‌ண்ப‌ர்க‌ள் அசோக்* ம‌ற்றும் ல‌க்ஷ்ம‌ண‌ன்* சேர்ந்து கொள்வார்க‌ள். இதில் அசோக் வ‌ணிக‌ வ‌ரி துறையில் ப‌ணி புரிந்து கொண்டு இருந்தான், சிரு வ‌ய‌திலிருந்தே என் நெருக்க‌மான ந‌ண்ப‌ர்க‌ளில் ஒருவ‌ன். அப்ப‌டித் தான் ஒரு நாள் திடீரென்று நாங்க‌ள் ஒன்று சேர‌, என் த‌ம்பி ச‌ர‌வ‌ண‌னும்* கோய‌ம்ப‌த்தூரிலிருந்து வ‌ந்திருந்தான். அசோக்கிட‌ம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் பில்லூரைப் பற்றி முன்பே சொல்லியிருந்த‌தால் அவ‌ன் நாம் இரண்டு நாட்க‌ள் பில்லூர் போய்வ‌ர‌லாம் என‌ ஆர‌ம்பிக்க‌ கூட‌ ல‌க்ஷ்ம‌ண‌னும் சேர்ந்து சென்று வ‌ர‌லாம் என‌ சொல்ல‌ ச‌ரி என்று கிள‌ம்ப முடிவெடுத்தோம்.

நாங்க‌ள் ஈரோட்டில் இருந்து கிள‌ம்பும் போதே மாலை 5 ம‌ணிக்கு மேல் ஆகி விட்ட‌தால் சற்று த‌ய‌க்க‌மாக‌ இருந்த‌து ஏனென்றால் கார‌ம‌டை எனும் இட‌த்தில் இருந்து காட்டுக்குள் 40 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் செல்ல‌ வேண்டும் என்ப‌தே அந்த‌ த‌ய‌க்க‌த்துக்கு கார‌ணம்.  அசோக்  ச‌ற்றும் யோசிக்காம‌ல் கிள‌ம்புவோம் என‌ வ‌ற்புருத்த‌ ஒரு ம‌ன‌தாக‌ கிள‌ம்பினோம். அசோக் எங்க‌ளுட‌ன் பில்லூர் வ‌ருவ‌து அதுவே முத‌ல் முறை ஆனால் நான் ம‌ற்றும் என்னுட‌ன் வ‌ந்த‌ உற‌வின‌ர் ச‌ர‌வ‌ண‌ன் முன்பு சென்ற‌ அனுப‌வ‌த்தில் சற்று நேர‌மாகி விட்ட‌தால் யோசித்தோம்.

பில்லூர் செல்லும் ம‌லைப்பாதை மிக‌வும் அட‌ர்ந்த‌ காடுக‌ள் நிறைந்த‌ ப‌குதி ம‌ற்றும் யானைக‌ள் அதிக‌ம் உள்ள‌ இட‌ம் என்ப‌தால் தான் அந்த‌ ப‌ய‌ம். நாங்க‌ள் சொல்வ‌தை கேட்கும் நிலையில் அசோக் இல்லை ஏனென்றால் அவ‌னுக்கு அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ளும் விடுமுறை. அவ‌னுட‌ன் அவ‌ன் ந‌ண்ப‌ன் ம‌கேஷும்* சேர்ந்து கொண்டு நானும் வ‌ருகிறேன் புற‌ப்ப‌ட‌லாம் என்று சொல்ல‌ நானும் ச‌ர‌வ‌ணனும் ச‌ரி நாம் தான் ஐந்து பேர் உள்ளோமே என்ற‌ தைரிய‌த்தில் அசோக்கின் காரையே ஒருவ‌ழியாக‌ எடுத்துக் கொண்டு கிள‌ம்பினோம்.

நாங்க‌ள் கார‌ம‌டை சென்ற‌டையும்போதே ம‌ணி 8.40 ஆகி விட்ட‌து, இன்னும் சுமார் 40 கிலோ மீட்ட‌ர் செல்ல‌ வேண்டும் அதுவும் அட‌ர்ந்த‌ காட்டுக்குள், நினைத்துப் பார்க்க‌வே ச‌ற்று ப‌ய‌மாக‌த் தான் இருந்த‌து. ச‌ரி இத்த‌னை பேர் உள்ளோமே என்ற‌ தைரிய‌த்தில் கார‌ம‌டையில் தேவையான‌ பொருட்க‌ளை வாங்கிவிட்டு காரை கிள‌ப்பினோம். பில்லூரில் பாபு டேமிலிருந்து இர‌ண்டு கிலோ மீட்ட‌ர் தொலைவில் வாட்ட‌ர் போர்ட் குவார்ட்ட‌ர்சில் த‌ங்கி இருந்த‌தால் அங்கு எதுவும் கிடைக்காது. கார‌ம‌டையில் இருந்து தான் எதுவென்றாலும் வாங்கி செல்ல‌ வேன்டும். ம‌கேஷ் கார‌ம‌டையிலிருந்து காரை கிள‌ப்பி 10 அல்ல‌து 15 கிலோ மீட்ட‌ர் தாண்டிய‌துமே என் முக‌த்தைப் பார்த்தான். அசோக்கும் ல‌க்ஷ்ம‌ண‌னும் போகும் பாதையை க‌வ‌னிக்காம‌ல் ஏதோ ச‌ண்டை போட்டுக் கொன்டிருந்த‌ன‌ர்.

நானும் ச‌ர‌வணனும் போகும் பாதையையே உற்று க‌வ‌னித்துக் கொண்டிருந்தோம், ஏனென்றால் கார‌ம‌டையிலிருந்து குந்தா ரோட்டில் ச‌ரியாக‌ 25 கிலொ மீட்ட‌ரில் வ‌ல‌து பக்க‌ம் திரும்ப‌ வேண்டும் என்ப‌தே. ம‌கேஷ் ரோட்டில் உடும்பு க‌ட‌ந்த‌துமே ச‌ற்று ப‌ய‌த்துட‌ன் நீங்க‌ள் யாராவ‌து காரை ஓட்டுங்க‌ள் என‌ ஆர‌ம்பித்தான். ஏன் அந்த‌ ப‌ய‌ம் என்றால் கார‌ம‌டையிலிருந்து 20 கிலோ மீட்ட‌ர் தாண்டியும் எந்த‌ வாக‌ன‌த்தையும் நாங்க‌ள் பார்க்க‌வில்லை என்பதே. நான் ம‌கேஷை நீயே ஓட்டு இங்கு வ‌ண்டியை நிறுத்த‌ வேண்டாம் என்று சொல்லி முடிக்கையில் கேர‌ளா செக் போஸ்ட் போர்ட் தெரிந்த‌து. நாங்க‌ள் ம‌கேஷை வ‌ல‌து ப‌க்க‌ ரோட்டில் திருப்ப‌ சொல்லி சிரிது தூர‌த்தில் வாட்ட‌ர் போர்ட் க்கான த‌னியார் பாதையில் வண்டியை விட‌ சொன்னோம்.

பாதையின் ஆர‌ம்ப‌த்தில் செக் போஸ்ட் தெரிந்த‌து, எங்கே இந்த‌ நேர‌த்தில் இவ்வ‌ழியாக‌ செல்கிறீர்க‌ள் என‌ கேட்க‌ நானும் ச‌ர‌வ‌ண‌னும் கீழே இர‌ங்கி அவ‌ர்க‌ளுக்கு பாபுவின் உற‌வின‌ர் என்று சொன்ன‌தும், அது ச‌ரி இந்த‌ நேர‌த்தில் இந்த‌ காட்டுப் பாதையில் எப்ப‌டி செல்வீர்க‌ள் என்ற‌தும் நாங்க‌ள் பார்த்துக்கொள்கிறோம் சார் என்று வீராப்பாக‌ சொல்ல‌ அவ‌ர் போகும் போது வ‌ழியில் வ‌ண்டியை எங்கும் நிறுத்த‌ வேண்டாம் என்றும் காரின் டேப் ரெக்கார்ட‌ரை உப‌யோகிக்க‌ வேண்டாம் என்றும் சொல்லி அனுப்பி வைத்தார்.

செக் போஸ்ட்டில் இருந்து கிள‌ம்பிய‌துமே பாதை குருகி சிங்கிள் ரோடாகிய‌து ம‌கேஷுக்கு இன்னும் ப‌ய‌ம் அதிக‌ரித்த‌து, ஏனென்றால் வ‌ண்டியை எங்கும் திருப்ப‌ முடியாது. அந்த‌ப் பாதையில் வாட்ட‌ர் போர்ட் ஸ்கூல் வேன் ம‌ட்டுமே சென்று வ‌ரும், பாபுவுட‌ன் ப‌ணி புரிப‌வ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளை கார‌ம‌டைக்கு அருகில் இருக்கும் ஸ்கூலுக்கு கூட்டி சென்று வ‌ரும் வேறு எந்த‌ வாக‌ன‌மும் அதை உபயோகிக்க‌ முடியாது ஏனென்றால் இப்பாதை டேமிற்கு பின்புற‌ம் உள்ள‌ இவ‌ர்க‌ள் குவார்ட்ட‌ர்சிற்கு சென்று வ‌ர‌ ம‌ட்டும் தான். ரோட்டின் இருபுற‌மும் அட‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளும் செடி கொடிக‌ளும் தான் தெரிந்த‌து, காட்டு வ‌ண்டுக‌ளின் ச‌த்த‌ம் தான் ப‌ய‌முருத்துவ‌து போல் இருந்த‌து.

ஒரு வ‌ழியாக‌ நான்கு கிலோ மீட்ட‌ர் க‌ட‌ந்து இருப்போம், ஒரு வ‌ளைவில் திடீரென்று காரை நிறுத்திய‌தும் அனைவ‌ரும் ப‌ய‌ந்தே போய்விட்டோம். ம‌கேஷ் க‌த்தியே விட்டான் ஏனென்றால் ரோட்டில் யானையின் ல‌த்தி அதில் ஆவி வேறு பற‌ந்து கொண்டிருந்த‌து. அப்பொழுது தான் யானை அந்த‌ வ‌ழியாக‌ க‌ட‌ந்து சென்றிருக்க‌க்கூடும். ஒரு வ‌ழியாக‌ ம‌கேஷுக்கு தைரிய‌ம் கொடுத்து காரைக் கிளப்பினோம். அது வ‌ரை அசோக்கும் ல‌க்ஷ்ம‌ண‌னும் ச‌ண்டை போட்டு வ‌ந்த‌வ‌ர்க‌ள் நான் திரும்பிப் பார்த்த‌போது ஒருவ‌ரையொருவ‌ர் முக‌த்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்க‌ள். காரின் பின் க‌த‌வு க‌ண்ணாடிக‌ள் ஏற்றப்ப‌ட்டிருந்த‌து.

அப்பொழுது தான் நாங்க‌ள் கிள‌ம்பும் போதே யோசித்த‌து அவ‌ர்க‌ளுக்கு உறைக்க‌ ஆர‌ம்பித்த‌து. ம‌கேஷ் ஒரு இட‌த்தில் காரை நிறுத்தி இந்த‌ இட‌த்தில் ரோடு கொஞ்ச‌ம் அக‌ல‌மாக‌ இருக்குது இங்கேயே திருப்பி வ‌ந்த‌ வ‌ழியாக‌வே திரும்பி போய்விட‌லாம் என்ற‌தும் அனைவ‌ரும் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்து யோசித்தோம். அதில் ச‌ர‌வ‌ண‌ன் அண்ணா இன்னும் கொஞ்ச‌ தூர‌ம் தான், அடுத்து இன்னும் இர‌ண்டு கிலோ மீட்ட‌ர்ல‌ குவார்ட்ட‌ர்ஸ் கேட் வந்திடும் என‌ சொல்ல‌ நாங்க‌ள் ம‌கேஷை உசுப்பி தைரிய‌ம் சொல்லி கிள‌ம்பினோம்.

காரில் ஒரே மெள‌ன‌ம் தான், யாரும் பேசிக்கொள்ள‌வில்லை. அனைவ‌ரும் ரோட்டையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தோம். ம‌கேஷ் கோப‌த்தில் க‌த்திக்கொண்டே வ‌ந்தான், ஏனென்றால் ச‌ர‌வ‌ணன் சொன்ன‌து போல் இர‌ண்டு கிலோ மீட்ட‌ர் தாண்டியும் இன்னும் இட‌ம் வ‌ர‌வில்லை என்ப‌தே. என‌க்கும் ச‌ர‌வ‌ண‌னுக்கும் தான் தெரியும் இர‌ண்டு கி.மீ இல்லை இன்னும் பத்து கி.மீட்ட‌ராவ‌து செல்ல‌ வேண்டும் என்று.

ஒரு இட‌த்தில் நாங்க‌ள் போன‌ பாதை அத்துட‌ன் முடிந்து ஏதொ ஒரு சிரிய‌ ம‌ண் ரோடு பிரிந்த‌து, காரை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தால் அது காட்டுக்குள் ஆட்க‌ள் ந‌ட‌ந்து செல்ல‌ உப‌யோகிக்கும் பாதை என்ப‌து புரிந்த‌து. பின் தான் புரிந்த‌து நாங்க‌ள் கேட்டைத் தாண்டி வ‌ந்து விட்டோம் என்று. ச‌ரி வேறு வ‌ழியில்லை வ‌ண்டியை ரிவேர்ஸ் தான் எடுத்தாக‌ வேண்டும் என்றால் பின்னால் என்ன‌ இருக்கிற‌து என்ப‌தே தெரிய‌வில்லை. ரிவேர்ஸ் லைட் இல்லையாடா அசோக்கு என்ற‌தும் அவ‌னுக்கு மூக்கிற்கு மேல் கோப‌ம் வ‌ந்த‌து, ஏன்டா கேட்க‌ மாட்டீங்க‌ன்னு ச‌த்த‌ம் போடும் போதே நானும் ம‌கேஷும் அந்த‌ காட்டுப் பாதையில் திருப்பி விட‌லாம் என‌ முடிவெடுத்தோம்.

சிறு சிர‌ம‌ங்க‌ளுக்குப் பிற‌கு ஒரு வ‌ழியாக‌ வ‌ண்டியைத் திருப்பினோம், திருப்பிய‌தும் ம‌கேஷ் எப்ப‌டிடா என்றான், டேய் போதும், இனியாவ‌து ரோட்ட‌ பார்த்துப் போ என்று சொன்ன‌தும் அவ‌ன் ச‌ர‌வ‌ண‌னையும் என்னையும் திட்ட‌ ஆர‌ம்பிக்கும்போதே, TWAD போர்ட் தெரிந்த‌து, அப்பாடா என்று அனைவ‌ரும் பெருமூச்சு விட்டோம், ஹார‌னை அழுத்தி பாபுவிற்காக‌ காத்திருந்தோம். பாபுவுட‌ன் வ‌ந்தவ‌ர்க‌ள் எப்ப‌டி இந்த‌ நேர‌த்தில் தைரிய‌மாக‌ இந்த‌ காட்டிற்குள் வ‌ந்தீர்க‌ள் என‌ ஆச்ச‌ர்ய‌ம் க‌ல‌ந்த‌ ப‌ய‌த்தோடு வ‌ர‌வேற்றார்க‌ள்.

நான் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு போயிருக்கிறேன் ஆனால் அவை எதுவுமே பில்லூர் அள‌வு என் ம‌ன‌தில் நிற்க‌ மறுக்கிற‌து என்றே சொல்ல‌லாம். நாங்க‌ள் இருந்த‌ இட‌ம் சுற்றிலும் அட‌ர்ந்த‌ காடு ந‌டுவில் டேம் ம‌ற்றும் TWAD குவார்ட்ட‌ர்ஸ் த‌னியாக‌ ஒரு ஒதுக்குப்புறத்தில் ம‌லைக்கு ந‌டுவே இருந்த‌து. நாங்க‌ள் இர‌ண்டு நாட்க‌ள் க‌ழித்து எங்க‌ளுக்கு கிள‌ம்ப‌வே ம‌ன‌ம் இல்லை, மீண்டும் ஒரு நாள் இருந்து விட்டுத்தான் வ‌ந்தோம்.

இப்பொழுது நாங்க‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌ந்தித்துக் கொண்டாலும் பில்லூர் அனுப‌வ‌ம் ப‌ற்றி பேசாம‌ல் இருந்த‌தில்லை. என் வாழ்க்கையில் என்றுமே ம‌ற‌க்க‌ முடியாத‌ ப‌ய‌ண‌ம் அது.

* பெய‌ர்க‌ள் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து.

Posted in அனுபவம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | 7 Comments »

நினைவில் நின்ற‌ த‌மிழ் பாட‌க‌ர்க‌ளும் பாட‌ல்க‌ளும்

Posted by சூர்யா மேல் ஜனவரி 3, 2009

ம‌லேசியா வாசுதேவ‌ன்

த‌மிழ் திரைப்ப‌ட‌ பாட‌க‌ர்க‌ளில் ம‌றக்க‌ முடியாத‌வ‌ர்க‌ளில் ப‌ட்டிய‌லில் இவ‌ரும் ஒருவ‌ர் என்றால் அது மிகையாகாது. இவ‌ர் பாடிய‌ ப‌ல‌ பாட‌ல்க‌ளை இன்று கேட்டாலும் அவை ம‌ல‌ரும் நினைவுக‌ள் போல் தான் தோன்றும். குறிப்பாக‌ இவ‌ர் இளைய‌ராஜாவின் இசையில் பாடிய‌ அனைத்து பாட‌ல்க‌ளுமே சூப்பர் ஹிட் பாட‌ல்களாக‌ அமைந்த‌தை யாராலும் ம‌றக்க‌ முடியாது.

அவ‌ர் பாடிய‌ பாட‌ல்க‌ளில் இன்றும் கேட்க‌ கேட்க‌ தூண்டும் பாட‌ல்க‌ள் ஏராள‌ம் என்றாலும் இங்கே சில‌ பாட‌ல்க‌ளைக் குறிப்பிட‌ விரும்புகிறேன்.

ஆகாய‌ க‌ங்கை பூந்தேன் ம‌ல‌ர் சூடி – த‌ர்ம‌யுத்த‌ம் (1979)
இந்த‌ மின்மினிக்கு க‌ண்ணில் ஒரு – சிக‌ப்பு ரோஜாக்க‌ள் (1978)
கோவில் ம‌ணி ஓசை த‌ன்னை – கிழ‌க்கே போகும் ர‌யில் (1978)
ஆயிர‌ம் ம‌ல‌ர்க‌ளே ம‌ல‌ருங்க‌ள் – நிற‌ம் மாறாத‌ பூக்க‌ள் (1979)
நீங்காத‌ எண்ண‌ம் ஒன்று நெஞ்சோடு நின்று – விடியும் வ‌ரை காத்திரு (1981)
கோடை கால‌ காற்றே – ப‌ன்னீர் புஷ்ப‌ங்க‌ள் (1981)
ஒரு த‌ங்க‌ ர‌த‌த்தில் – த‌ர்ம‌யுத்த‌ம் (1979)
வான் மேக‌ங்க‌ளே வாழ்த்துங்க‌ள் – புதிய‌ வார்ப்புக‌ள் (1979)
பூங்காற்று திரும்புமா – முத‌ல் ம‌ரியாதை (1985)
வெட்டி வேரு வாச‌ம் – முத‌ல் ம‌ரியாதை (1985)
வெள்ளை ம‌ன‌ம் உள்ள‌ ம‌ச்சான் – சின்ன‌ வீடு (1985)

ர‌ஜினிகாந்தின் ப‌ட‌த்தில் இவ‌ர் பாடிய‌ ஏராள‌மான‌ பாட்டுக்க‌ள் மற‌க்க‌ முடியாத‌வை ம‌ட்டும‌ல்லாம‌ல் இன்றும் எல்லா ஊர் திருவிழாக்க‌ளிலும் இவ‌ருடைய‌ பாட‌ல்க‌ள் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிற‌து.

இன்றும் திருவிழாக்க‌ளில் முத‌ல் பாட‌ல் ம‌லேசியா வாசுதேவ‌ன் பாடிய‌ “பொதுவாக‌ என் ம‌ன‌சு த‌ங்க‌ம்” தான் முத‌லிட‌ம்.

ம‌னோ

M. S. விஸ்வ‌நாத‌னின் க‌ண்டுபிடிப்பான‌ இவ‌ர் இளைய‌ராஜாவின் இசையில் 1980 ‍ன் இறுதியிலிருந்து 1990 ‍ன் இறுதி வ‌ரை ப‌ல‌ ஹிட் பாட‌ல்க‌ளைப் பாடிய‌ பெருமை இவ‌ருக்குண்டு. குறிப்பாக‌ ம‌னோ ம‌ற்றும் சித்ரா கூட்ட‌ணியில் வ‌ந்த‌ பாட‌ல்க‌ள் ஏராள‌ம்.  இவ‌ர் பாடிய‌ பாட‌ல்க‌ளில் என‌க்குப் பிடித்த‌ சில‌ பாட‌ல்க‌ள்:

செண்ப‌க‌மே செண்ப‌க‌மே – எங்க‌ ஊரு பாட்டுக்கார‌ன் (1987)
ஓ பாப்பா லாலி கண்ம‌ணி லாலி – இத‌ய‌த்தை திருடாதே (1989)
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா – இத‌ய‌த்தை திருடாதே (1989)
ஓம் ந‌ம‌ஹா உருகும் உயிருக்கு – இத‌ய‌த்தை திருடாதே (1989)
காவிய‌ம் பாட‌வா தென்ற‌லே – இத‌ய‌த்தை திருடாதே (1989)
நிலா காயும் நேர‌ம் ச‌ர‌ண‌ம் – செம்ப‌ருத்தி (1992)
குட‌கு ம‌லை காற்றில் வ‌ரும் பாட்டு – க‌ர‌காட்ட‌க்கார‌ன் (1989)
வா வா வா வா க‌ண்ணா வா – வேலைக்காரன் (1987)
ம‌லையாள‌க் க‌ரையோர‌ம் – ராஜாதி ராஜா (1989)
ம‌லைக் கோவில் வாச‌லில் கார்த்திகை – வீரா (1994)

“செண்ப‌க‌மே செண்ப‌க‌மே” என்ற‌ பாடலின் மூல‌ம் புக‌ழ் பெற்ற‌வ‌ர், தொட‌ர்ந்து ப‌ல‌ சூப்ப‌ர் ஹிட் பாட‌ல்க‌ள் பாடும் வாய்ப்பு இவ‌ருக்கு கிடைத்த‌து. முத்து ம‌ற்றும் சிவாஜி ப‌ட‌ங்க‌ளுக்கு தெலுங்கில் ர‌ஜினிகாந்திற்கு பின்ன‌ணி குர‌ல் கொடுத்த‌வ‌ரும் இவ‌ரே.

தீப‌ன் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி

என்னிட‌ம் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் இவ‌ர் பாடிய‌ பாட‌லை கேட்டு விட்டு, இந்த‌ப் பாட‌லைப் பாடிய‌து யார் என்று கேட்ட‌துண்டு. ப‌ல‌ சூப்ப்ர் ஹிட் பாட‌லைப் பாடிய‌ இவ‌ரை ப‌ல‌ருக்கு நினைவில்லாம‌ல் போயிருக்க‌லாம். த‌ற்போது இவ‌ர் ஒரு சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளிலும் சீரிய‌ல்க‌ளிலும் ந‌டித்துக் கொண்டு இருக்கிறார்.

விஜ‌ய் டி.வி த‌ற்போது ந‌ட‌த்திக் கொண்டிருக்கும் “சூப்பர் சிங்க‌ர் 2008” ‍ல் இவ‌ரைப் பார்த்த‌தும் இவ‌ர் பாடிய‌ பாட‌ல்க‌ள் தான் என் ம‌ன‌தில் வ‌ந்து நின்ற‌ன‌. அவ‌ர் பாடி என‌க்குப் பிடித்த‌ சில‌ பாட‌ல்க‌ள்:

செவ்வ‌ந்திப் பூக்க‌ளில் செய்த‌ வீடு  – மெல்ல‌ப் பேசுங்க‌ள் (1983)
பூங்க‌த‌வே தாழ்திற‌வாய் – நிழ‌ல்க‌ள் (1980)
அரும்பாகி மொட்டாகி – எங்க‌ ஊரு காவ‌ல்கார‌ன் (1988)
தேவ‌தை போல் ஒரு பெண்ணிங்கு  – கோபுர‌ வாச‌லிலே (1991)

இவ்வ‌ள‌வு நன்றாக‌ப் பாடும் திற‌மை ம‌ற்றும் இனிமையான‌ குர‌ல் வ‌ள‌ம் இவ‌ரிட‌ம் இருந்தும் ஒரு கால‌கட்ட‌த்தில் இருந்தே இவ‌ருக்கு ந‌ம‌து இசை அமைப்பாள‌ர்க‌ள் வாய்ப்பு அதிக‌ம் தராம‌ல் போன‌து ஏன் என்று தெரிய‌வில்லை.

இவ‌ர் புக‌ழ் பெற்ற‌ ப‌ழைய‌ பாட‌க‌ரான‌ திரு. திருச்சி லோக‌நாத‌னின் புத‌ல்வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்தக்க‌து.

Posted in சினிமா | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »